Table of contents
» Direct links
» Random post
» Comment
Unknown 10/03/2021 02:18:55 387 Share
கையில் பணம் வந்தவுடன் மறுநொடியே செலவுகளும் வந்து விடும். அதிலும் நாம் போட்டு வைத்திருக்கும் மாத செலவை தாண்டி நாம் எதிர்பார்த்திராத வீண் செலவுகளும் சேர்ந்து விடும். அதாவது எதிர்பார்த்திராத நேரத்தில் வாகனம் பழுதடைதல், உடல் நோய்வாய்ப்படுதல், ஏதேனும் விபத்து நிகழ்தல், உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டி இருத்தல் இது போன்ற விஷயங்களுக்காக செலவு செய்வதையே வீண் செலவுகள் என்கின்றோம். இவ்வாறான வீண் செலவுகளை குறைப்பதற்காக நமது வீட்டில் எப்பொழுதும் இந்த ஒரு பொருள் மட்டும் தவறாமல் இருந்திட வேண்டும். அதுபோல் நாம் செலவு செய்யும் முதல் பணமும் இந்த ஒரு பொருளை வாங்குவதற்காக இருந்தது என்றால் நமது பணம் வீண் விரயமாவதை தவிர்க்க முடியும். அப்படி சிறப்பு வாய்ந்த அந்த பொருள் என்ன என்பதனையும், அதற்கான பலன் என்ன என்பதனையும் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். இறைவனுக்கான பூஜைகளின் பொழுதும், நாம் கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் பொழுதும், மந்திரம் ஓதும் பொழுது ஓம் தனம் தான்யே என்ற சொல் தவறாமல் ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் கேட்டிருக்கிறோம். அதாவது தனம் என்றால் பணம் என்று பொருள். தான்யம் என்றால் நாம் உணவிற்காக பயன்படுத்தும் தானிய வகைகள் என்று பொருள். பணத்திற்கு பிறகு நமது வீட்டில் எப்போதும் நிறைந்து இருக்க வேண்டியது தானிய வகைகள் தான். எந்த வீட்டில் எப்பொழுதும் தானியங்கள் குறையாமல் இருக்கின்றதோ அந்த வீடு சுபிட்சம் அடைந்ததாகவும், அந்த இடத்தில் இருக்கும் குடும்பத்தினர் நல்ல சுகத்துடன் இருப்பதாகவும் அர்த்தமாகும். உணவு என்றாலே அதில் முதலில் இருப்பது அன்னம் தான். அந்த அன்னத்திற்கு அதிபதியான அன்னலட்சுமி தான் நமது வீட்டில் குறையாத தானியத்திற்கு அருள் புரிபவராக இருக்கிறார். அன்னபூரணி தேவிக்கு மிகவும் பிடித்தமான தானியம் என்னவென்றால் துவரை தான். இந்த துவரையை பயன்படுத்தி நாம் அதிகம் செய்வது சாம்பார் வகையை தான்.
எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அசுப காரியமாக இருந்தாலும் அங்கு துவரம் பருப்பை வைத்து செய்யும் சாம்பார் தான் அத்தியாவசிய உணவாக இருக்கும். இவ்வாறு அன்னபூரணி தேவிக்கு இஷ்டமான பொருளாகவும், தான்யங்களில் முதன்
No description ... bapeedam.blogspot.com
Tags: பண விரயம் அதிகமாக
IDs: 1835
Titles: https://bapeedam.blogspot.com/2021/09/blog-post_53.html
Sponsor url:
tronmephminers.blogspot.com
« Next |